1. நாவாயின் வருகை.

101 5 4
                                    

நேசத்துக்குரியவரும், தான் வாழ்ந்த காலத்தின் விடியலென ஒளி வீசும்படி விதிக்கப்பட்டவருமான அல்முஸ்த்தப்பா, தன் பூர்வீக தீவிற்குத் திரும்பும் பொருட்டு ஆர்பிலிஸ் நகரத்தில், நாவாயின் வருகைக்காக பன்னிரு ஆண்டுகள் காத்திருந்தார்.

பன்னிரு ஆண்டுகளுக்குப் பின், அறுவடை மாதமான எலூலின் ஏழாம் நாள், அவர் நகரத்தின் மதில் எழும்பாத மலைமீது ஏறி கடல் தெரியும் திசையில் நோக்கினார் அங்கு மென்பனியுடன் நாவாயும் கரை திரும்பக்கண்டார்.

அவர் இதயத்தின் கதவுகள் அனைத்தும் திறந்து அவர் அடைந்த பேரின்பம் கடல் மேல் பறந்து பரவியது. அவர் கண்களை மூடி ஆன்மாவின் மோனத்தால் பிரார்த்தனை செய்தார்.

ஆனால் அம்மலையை விட்டு இரங்கியபோது அவர் மீது ஒரு சோகம் இரங்கியது.

"எவ்வாறு எந்த வருத்தமும் இன்றி இந்த நகரை நீங்க முடியும்?

ஆன்மாவில் வலி எழுப்பும் பிரிவின் ரணமின்றி இந்நகரை நீங்கத்தான் முடியுமா?" என்று அவர் இதயத்தில் தோன்றியது.

இந்நகரின் சுவர்களுக்குள் வலியுடன் கழித்த பகல்கள் எத்தனை நீளமானது, தனிமையில் கழித்த இரவுகள் எத்தனை நீளமானது, இந்த வலியையும் தனிமையை வருத்தமின்றி பிரிவது கடினமன்றோ?

இத்தெருக்களில் நான் சிந்திய ஆன்மாவின் சிதறல்கள் பல,

இம்மலைகளில் ஆடைகள் இன்றி சுதந்திரமாக சுற்றித் திரியும் என் ஆசைகளின் குழவிகள் பல. அவற்றை வலியும் கனமும் இன்றி நீங்குவது முடியாது.

அவை நான் கழட்டும் ஆடையல்ல, நான் கிழித்து எடுக்கும் என் சதை.

நான் விட்டுச்செல்வது வெறும் நினைவுகள் மட்டும் அல்ல, ஆராத பசியாலும் தீராத தாகத்தாலும் இனிமை ஊரிய என் இதயத்தை.

அது இருப்பினும் நான் இனியும் காத்திருக்க முடியாது.

தனக்குள் எல்லோரையும் அழைக்கும் கடல் என்னையும் அழைக்கிறாள் நான் சென்றாக வேண்டும்.

தீர்க்கதரிசிWhere stories live. Discover now