❤துணைவன் 35❤

Start from the beginning
                                    

அவன் சிரிக்கவும் தலையணை எடுத்து அவன் மீது எறிந்தவள் " கொஞ்ச நேரத்தில் பயமுறுத்திட்ட டா இடியட் " என்க

அவனோ " ஹாஹா அதான் பார்த்தனே திரு திருன்னு முழுச்சுக்கிட்டு, பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிட்டு " என்றவன் சிரிக்க,

" ஹான் நான் ஒன்னும்  முழிக்கலாம் இல்ல . எதோ சும்மா கொஞ்ச நேரம் அமைதியா இருந்தேன். அதுக்காக நீ ஒன்றும் உன்னைப் பார்த்து தான் மிரண்டுட்டேன் ரொம்ப சீன் கிரியேட் பண்ணாத" என்றவளைப் பார்த்து

" ஆங்ஹான்...  சரி சரி நம்பிட்டேன் " என்றவன் சிரிக்க,  பிறகெங்கே அவள் முறைக்க?  அவளுக்கே தன்னிலை எண்ணி சிரிப்புதான் வந்தது. 

சிரித்து முடித்தவன் " சரி டா நாளைக்கு  ஃபங்சன் இருக்கு நல்லா தூங்கு.  குட் நைட் மகிழ் " என்க

அழகாக சிரித்த மகிழினி " குட் நைட் யுவி " என்றாள்.

இத்துணை ஆண்டு காதல் தன் மனைவியாக இப்போது,என்னும் நினைவே யுவனிற்கு மகிழ்ச்சியை பலமடங்காக்கியது. இருவரும் நிம்மதியாக உறங்கிவிட்டனர்.

விடியற்காலை சீக்கிரத்தில் எழுந்த யுவன் மகிழினியைப் பெரும்பாடுபட்டு எழுப்பிக்கொண்டிருந்தான்.

"மகிழ் எழுந்திடும்மா.  நம்ம சீக்கிரம் கிளம்பனும் ரிசப்சன் இருக்கு.  வீட்டில் இருந்து  கால்ப்பண்ணிட்டாங்க.  கெட் அப்  " என்று அவளை உலுக்கிக் கொண்டிருந்தான்.

அவன் கைகளை உதறியவள் " போடா இடியட் . சும்மா இருந்தவளை கல்யாணம் பண்ணி கூட்டிவந்து ஏழு மணிக்கெல்லாம் எழுந்திருக்க சொல்லிக் கொடுமை படுத்துற.  உன் மேல் புகார் கொடுத்துடுவேன் . போ யுவி தூக்கம் வருது.  இன்னும் கொஞ்ச நேரம் ப்ளீஸ் " என்று அவள் உலறுவதைக் கேட்டு, நெற்றியில்  அடித்துக் கொண்டவன் ,  போராடி அவளை  கிளப்பினான்.

இவர்களுக்கு இன்று திருமண வரவேற்ப்பு விழா. அங்கே அனைவரும் மண்டபம் செல்ல  ஆயத்த நிலையில் இவர்கள் வருவதற்காக காத்திருந்தனர். இவர்களோ மகிழினி செய்த கலாட்டாவில் தாமதமாகவே சென்றனர். பெரியவர்கள் தாமதத்தைக் கேட்டு அவர்களை  சங்கடப்படுத்தக் கூடாது என அவர்களை  வரவேற்க,  இளவட்டங்களோ போதும் போதுமென்ற அளவு ஓட்டித் தள்ளினர்.

தோழனே துணையானவன் (completed) Where stories live. Discover now