தேடல் - 4

Start from the beginning
                                    

ஆட்டோ கிளம்பியதும் பிரபாவும் ஆட்டோவை பின் தொடர்ந்தான். மிது பின்னால் திரும்பி பிரபா அவளை பின் தொடர்வதை கண்டு பயந்தவள் "நா நினைச்சது கரெக்ட் தான் அவங்க என்னை பார்த்துட்டு தான் பாலோவ் பன்றாங்க" என்று நினைத்தவள் அவர்களை திரும்பி திரும்பி பார்த்தவாரு சென்றாள்.

"அண்ணா இங்கேயே நிறுத்துங்க" என்று மிது ஆட்டோ ட்ரைவரிடம் கூற அவரும் வண்டியை நிறுத்தினார். மிது பணம் கொடுத்து விட்டு அங்கிருந்த ஓர் தொழிற்சாலையின் முன் இருந்த காவலாளியிடம் ஏதோ பேசியவள் பின் அவசரமாக உள்ளே சென்றாள்.

பிரபா வாசு டிடெக்டிவ் மூவரும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தனர். "சார் உள்ள போய் விசாரிங்க" என்று பிரபா டிடெக்டிவிடம் கூற அவரும் இறங்கி காவலாளியிடம் சென்றான்.

முதலில் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்த காவலாளி பின் உள்ளே யாரிடமோ அழைப்பேசியில் அழைத்து கேட்டு விட்டு உள்ளே அனுமதித்தார்.

டிடெக்டிவ் உள்ளே சென்று அரைமணி நேரத்தில் வெளியில் வந்தார். "என்ன சார் அட்ரஸ் கிடைச்சதா" என்று வாசு கேட்க அவர் "இல்ல சார் அவங்க நம்ம பாலோவ் பன்றத பார்த்துட்டாங்க அவங்க இங்க வேலை செய்யல" என்று கூற

"வாட் அப்போ எதுக்கு உள்ள போனா" என்று பிரபா அதிர்ச்சியிலும் அவளை கண்டும் அவளை பற்றி அறிந்துக் கொள்ள முடியா கோபத்திலும் கேட்டான்.

"இத பாருங்க" என்று டிடெக்டிவ் ஒரு வீடியோவை காண்பிக்க அதில் மிது காவலாளியிடம் பேசி விட்டு உள்ளே சென்றவள் அந்த தொழிற்சாலையின் மறுபுற வாயிலில் வெளியில் சென்று ஓர் ஆட்டோ பிடித்து சென்று விட்டாள்.

அதை கண்டு பிரபா "ஷிட்" என்று ஸ்டேரிங்கை கையால் குத்தினான். "ஓகே சார் நீங்க கிளம்புங்க அந்த ஏரியால விசாரிங்க" என்று வாசு கூற அவரும் வேறொருவருடன் வண்டியில் கிளம்பி விட பிரபா கோவமாக இருப்பதை கண்டு அவனை பக்கத்தில் அமர கூறி விட்டு வண்டியை ஓட்டினான்.

பிரபாவிற்க்கு சாருவுடன் திருமணம் ஆன நிகழ்வு நினைவு வந்தது.

கண்மணியின் காதலை தேடிWhere stories live. Discover now