அவளது நெருக்கம் இருந்த குளிரிற்கு மாறாக அவனை தணலாய் எரிக்க கண்ணை இறுக்க மூடிய சக்தி தன் நெற்றியின் மேல் இருந்த அவள் கையை பற்றி இறக்கி விட்டு கண்ணை திறந்தான். சாரு இன்னும் சக்திக்கு என்ன ஆகிவிட்டது என பயந்து விழித்துக்கொண்டிருந்தாள். நீண்ட ஈர முடி அவளது முகத்தில் பாதியை மறைத்திருக்க அவளது அழகில் தன்னை தொலைத்திருந்தவன் அந்த முடியை ஒதுக்கி விட்டு குனிந்து அவள் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டான் சக்தி. சாரு செயலற்று நின்றவண்ணம் அவனை நிமிர்ந்து பார்க்க.. சற்றே ஆச்சரியத்தில் விரிந்திருந்த அவளது மொட்டு இதழ்கள் அவன் கவனத்தை ஈர்த்தது. சற்றே அழுத்தமாய் வருடி விட்டவன்.. ஒரு கையால் அவளை தன்னோடு மேலும் இறுக்கியவண்ணம் மறுகையால் அவளது முகம் பற்றி அழுத்தமாய் தன் உதடுகளால் அவள் இதழ்களை மூடினான் சக்தி. என்னவென்று தெரியாத ஒரு மாயைக்குள் கட்டுப்பட்டது போல் இருந்தது சாருவிற்கு.. அவளது இதழ்களின் நடுக்கத்தை வெளிப்படையாகவே சக்திக்கு உணர முடிந்தது. மெதுவாய் அவற்றை உள்வாங்கிக்கொண்டான்.

எவ்வளது நேரம் கடந்ததோ சக்தியின் அறைக்கதவை யாரோ தட்டும் ஒலியில் சட்டென தன்னிலை உணர்ந்தவன் சாருவை விட்டு விலகி சிரிப்புடனே மீண்டும் ஒரு முறை தன் இதழை ஒற்றிவிட்டு பின்னோக்கி நகர்ந்து தன் தலையை அழுந்த கோதிக்கொண்டான். சாரு விழித்து விட்டு சக்தியை நிமிர்ந்தும் பார்க்காமல் சுவர் பக்கம் திரும்பி நின்று கொண்டாள்.

கதவை தட்டிய சாவித்ரியிடம் சாரு தயாராகுவதாக கூறிவிட்டு அறைக்கு வந்து தன் ஈர உடையை மாற்றி தயாராகி கண்ணாடி முன் நின்று தலையை துவட்டிக்கொண்டு நின்றான் சக்தி. நேரம் கழித்து குளியலரைக்கதவு திறப்பதை கண்ணாடி வழியே பார்த்தவன் தனக்குள் சிரித்துக்கொண்டு அங்கேயே நின்று கொண்டான். உள்ளிருந்த சாருவோ.."எப்படி இப்போ ட்ரெஸ் கேட்குறது.. " என்று எண்ணி நின்று கொண்டிருந்தாள்.

ஒருவாரு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.."ச..எஹ்ம்.." சக்தி என அழைக்க ஆரம்பித்தவள் ஏதோ தடுக்க வெறுமனே தொண்டையை செறுமினாள்.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now