புதிதாக சேர்ந்தவர்களுடன் அங்கு இருக்கும் கேன்டீன் சென்றவள் அங்கே அவர்களுடன் அமர்ந்து அவள் கொண்டு வந்து இருந்த உணவை உண்ண ஆரம்பித்தாள்..
"
நீங்க எந்த டீம்?? " என்று அவள் பக்கத்தில் அமர்ந்த இருந்த ஒரு பெண் கேட்க . அதற்கு இவள் "நான் ரீசர்ச் டீம் .. " என்று பதில் அளித்தாள்..
நீங்க வேற ஏதாவது டீம் கேட்டு வாங்கி இருக்கலாம் இல்ல??
ஏங்க ?? எனக்கு அது ரொம்ப பிடிச்ச டிபார்ட்மெண்ட் அதான் அது வேணும்னு கேட்டு வாங்குனேன்..
இல்ல இங்கே என்னோட சீனியர் வேலை செய்யறாங்க.. அவங்க கிட்ட ஆபீஸ் பத்தி விசாரித்த அப்போ எந்த டீம் வேணா போலாம்.. ஆனா அந்த ரீசர்ச் டீம் மட்டும் வேண்டாம்ன்னு சொன்னாங்க ... அதான் உங்ககிட்ட சொல்றேன்.. வேற டீம் வேணும்னு இப்போவே கேட்டு மாதிக்கோங்க...
ஏன் அந்த டீம்ல அப்படி என்ன பிரோப்ளேம் ??
அந்த டீம் ஹெட் செம சேடிஸ்ட்டாம்.. பொண்ணுங்களை மதிக்கவே மாட்டானாம்..
அதான் வேற டீம் போய்டுங்க..
"ஒஹ்ஹ்.. சரிப்பா .. தான்க்ஸ் பார் யுவர் இன்போர்மேஷன்.. " என்று கூறி இவள் மெலிதான புன்னைகையை சிந்தினால்..
அதன்பின் எந்த விதமான பேச்சு வார்த்தைகளும் இன்றி மதிய உணவை உண்டுவிட்டு அவர் அவருக்கு உரிய டிபார்ட்மெண்ட் சென்றனர்..
இவளுடைய டிபார்ட்மெண்ட் சென்ற பொழுது இவளுடன் ஹச்.ஆர் சேர்ந்து கொண்டார்..
உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. இந்த டீம் ஹெட் கொஞ்சம் ஒரு மாதிரி .. டக்குனு கோவம் வந்துடும்.. பாத்து இருந்துக்கோங்க..
ஹச்.ஆர் இவ்வாறு கூறியவுடன் இவள் மனதிற்குள் ' என்னடா ஆள் ஆளுக்கு இவ்ளோ பில்ட்அப் கொடுக்கறாங்க.. அவ்ளோ பெரிய ஆள் யாருன்னு பார்த்தே ஆகணுமே.. ' நினைத்தவள் அவருடன் அங்கே சென்றால்..
2.நெயிர்ச்சியின் முழுவல் நீ
Start from the beginning