அவளை அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தவன் சற்று நேரத்தில் சுதாகரித்துக் கொண்டு அவனும் உள்ளே வந்தான்.
அவள் ஏற்கனவே ஒரு மேசையில் அமர்ந்திருக்க, அவளருகிலிருந்த மற்ற இருக்கையில் அமரப் போனான் நாஸிர்.
அவன உட்காருவதற்கு ஒரு இன்ச் இடைவெளி இருக்கையில் கதிரையைப் பிடித்து மற்ற புறம் தள்ளி விட்டாள்.
அதை முன்னரே கண்டு கொண்டவன் நல்ல வேளை எல்லோர் முன்னிலையிலும் விழுந்து மானத்தை வாங்காமல் தப்பி விட்டான்.
அந்தக் கதிரை இப்போது மேசையின் எதிர்ப்புறமாகச் சென்றிருக்க அங்கு சென்று அமர்ந்து கொண்டவன் தீயாய் எரியலானான்.
"அறிவிருக்கா? அப்படி கதிரையை இழுத்து விடுற? விழுந்திருந்தால்..."
"விழுந்திருந்தால் எழும்ப வேண்டியது..." என்று அவள் அசட்டையாகப் பதிலளித்ததும் அவன் கோபம் இன்னும் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது.
"என்ன நீ? உன் பாட்டுக்கு என்ன வேணாலும் செய்வ? நானும் முதல்ல இருந்தே பொறுமையா இருக்கேன்" என்று அவன் மேலும் பேச முன்பு வெயிட்டர் வந்து அருகில் நிற்க, பேச்சு அத்துடன் அடங்கியது.
வெயிட்டர் மெனு கார்டைத் தந்து விட்டுப் போக, அவன் தனக்குப் பிடித்தவற்றையெல்லாம் ஜாஸியாவுக்கும் பிடிக்குமா என்று கேட்டுக் கொண்டிருந்தான்.
அவளுக்குத் தான் எரிச்சலுக்கு மேல் எரிச்சலாக இருந்தது. முதலில் அவன் அழைத்து வந்திருப்பது ஒரு முஸ்லிம் ஓட்டலல்ல.
அவன் பட்டியலிட்டுக் கொண்டிருக்கும் உணவுகளெல்லாம் ஹலாலானவையா என்று எவருக்குப் தெரியாது.
"சோ... சிக்கன் பிரியாணி ரெண்டு" ஜாஸியா ஏதும் பேசாமலிருக்க அவனே அவளுக்கும் சேர்த்து ஓடர் செய்தான்.
வெயிட்டர் நகர்ந்து செல்ல முன்பு அவசரமாக, "எனக்கு fபிஷ்..." என்று அவள் நீட்டி முழக்க, நாஸிர் கேள்விக் குறியாக அவளை நோக்கினான்.
YOU ARE READING
நிழல் கொடுத்த மரம்✔
Spiritualமுஸ்லிம்கள் என்று பெயருக்குச் சொல்லிக் கொண்டாலும் இஸ்லாமியச் சூழல் மருந்துக்கும் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்றாவது மகள் ஜாஸியா. இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கடைப்பிடிப்பதற்காக வீட்டினரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தன்னாலான எல்லா முயற்சிகளையும்...
04 | சந்திப்பு
Start from the beginning