மறுநாள் விடியலில் அபிமன்யு அழைத்ததால் விபுன்யாவையும் அழைத்து கொண்டே ஹரீஷ் ஸ்டீஃபனின் வீட்டிற்கு வந்திருக்க ஸ்டீஃபன் மற்றும் அபிமன்யு ஆதி வேலை பார்த்த மருத்துவமனை மீதிருக்கும் தங்களின் சந்தேகத்தை அவர்களிடம் வெளியிட்டனர்.
" அப்போ அந்த ஹாஸ்பிட்டல் மேல தான் தப்புன்னு சொல்றீங்களா?? " என ஹரீஷ் கேட்க அதற்கு இடவலதாய் தலையசைத்த அபிமன்யு " இல்ல, இருக்களாம்னு சொல்றேன். எப்படி பார்த்தாலும் ஆதி கொலைய பத்தி நாம விசாரிக்கனும்னா அந்த ஹாஸ்பிட்டலையும் விசாரிச்சு தான் ஆகனும். அதனால நாம அங்க ஒரு நாள் போகனும் "
" நீங்க சொல்றது தான் சரின்னு எனக்குத் தோனுது அபி ஸர். ஆதி அங்க வேலை பார்த்தப்போ சந்தோஷமா தான் இருந்தா. அவ நிம்மதியில்லாம இருந்ததோட அவளப் பத்தி அந்தளவுக்கா தப்பா பேசியிருக்காங்கன்னா கண்டிப்பா அங்க ஏதோ ஒரு தப்பு இருக்கு. உங்க கூட நானும் வரேன் " என முன் வந்தாள் விபுன்யா.
ஸ்டீஃபனை இன்றும் வீட்டிலே விட்டு விட்டு ஹரீஷ் மற்றும் விபுன்யாவுடன் அந்த மருத்துவமனையை நோக்கிச் சென்றான் நம் நாயகன். அவர்கள் உள்ளே சென்றதுமே வரவேற்பரையிலிருந்த ஒரு பெண் சற்று பதட்டமாய் அவர்களை பார்த்தாள்.
" நாங்க உங்க ஹாஸ்பிட்டல்ல விசாரணைக்காக வந்துருக்கோம். " என ஹரீஷ் கூறிக் கொண்டிருக்கும் போது அபிமன்யு பொருமையாய் அந்த மருத்துவமனையை நோட்டமிட்டான். வாயிலிலே அங்கு பல கண்காணிப்பு கமெராக்கல் இருக்க நிச்சயம் ஒவ்வொறு வளாகத்திலும் கூட இருக்க வாய்ப்பிருக்கிறதென எண்ணிக் கொண்டே பதிலுக்காய் காத்திருந்தான்.
அந்த பெண் யாருக்கோ அழைப்பு விடுத்து கூறியதும் ஹரீஷிடம் ஒரு வழியை கூறி அங்கு செல்லக் கூறினாள். ஹரீஷ் வழி நடத்த அவனோடு நடந்த விபுன்யா பின் வரும் அபிமன்யுவை அவ்வப்போது கவனித்தபடியே வர அபிமன்யுவின் கண்கள் கூர்மையாய் ஒவ்வொரு இடத்தையும் அளந்து கொண்டே வந்தது.
நான்காவது மாடிக்கு செல்வதற்காய் மின்தூக்கியில் ஏறியவர்கள் நான்காவது மாடியில் காலை வைத்ததும் அங்கு வந்த ஒரு செவிலியரிடம் வழி கேட்டனர். நம் நாயகன் அப்போதும் தன் கண்களை அங்குமிங்கும் சுழட்டி கொண்டே இருந்த போது தான் யாரோ ஒருவரின் கண்களில் விழுந்தான் அவன். அவரது கண்கள் அபிமன்யுவை பார்த்த சில நொடிகளிவே அடையாளங்கண்டிருந்தது.
ஒரு வழியாக சரியான அறையை கேட்டதும் கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் ஹரீஷ். அவனை பின் தொடர்ந்து உள் நுழைந்த நம் நாயகனின் கண்கள் முன் அமர்ந்திருந்தார் அந்த மருத்துவனையின் தலைமை மருத்துவர் செல்வராஜ்.
அவரை கண்டதும் அபிமன்யுவின் மனதில் ஒரு இணம் புரியா உணர்வொன்று அழுத்தமாய் எழுந்தது. அவர் காவலர்கள் இருவரையும் அமர வைத்ததும் ஹரீஷ் நம் நாயகன் ஏன் அமைதியாக இருக்கிறான் என்பதையறியாமல் பேச்சை தொடங்கலாமா வேண்டாமா என் இருவேறாய் சிந்தித்து கொண்டாருந்தான்.
" சொல்லுங்க ஸர் என்ன விஷயமா வந்துருக்கீங்க?? " என செல்வராஜ் அந்த மௌனத்தை உடைத்தார். " ஒரு விசாரணைக்காக தான் மிஸ்டர் செல்வராஜ். மூணு வர்ஷத்துக்கு முன்னாடி படுகொலையில் இறந்து போன உங்க மருத்துவமனையில் வேலை பார்த்த டாக்டர் ஆதிய பத்தி விசாரிக்க வந்துருக்கோம் " என அபிமன்யு அவரது கண்களை நேருக்கு நேராய் பார்த்து கூறினான்.
ஒரு நொடி அவரது கண்களில் திடுக்கிட்ட உணர்வு பளிச்சிட்டாலும் அதை மிகவும் விரைவாய் மறைத்து கொண்டவர் " அப்படி யாரையும் எனக்குத் தெரியாதே " என்றார் சாதாரணமாய். " ஏன் தெரியாது டாக்டர்?? " என ஹரீஷ் அவரை குழப்பமாய் பார்க்க " நான் இதே ஹாஸ்பிட்டலோட வேற கிளைல அப்போ வேலை செஞ்சிட்டு இருந்தேன் ஸர். இங்க இருந்த டாக்டர்ஸ் பத்தியெல்லாம் எனக்கு தெரியாது " என நாசூக்காய் பேச்சை முடிக்க முயற்சித்தார்.
சிறிது சிறிதாய் நம் நாயகனின் கண்களில் மட்டும் தீவிரம் கூடிகொண்டே போனது. " ஆனா ஸர், நான் வந்தப்போ ஏதோ ஒரு டாக்டர பத்தி பேசிக்கிட்டிருப்பாங்க. அந்த பொண்ணுக்கு மரியாதையே தெரியாதாமே. யாரோ என் வயசுல உள்ள ஒருத்தரையே கை நீட்டி அடிச்சதா பேசிக்கிட்டாங்க. " என அவரே ஆதியை பற்றிய வதந்தியை மீண்டும் நினைவு படுத்த ஹரீஷ் எச்சிலை கூட்டி விழுங்கினான் எங்கு அபிமன்யு கோவம் அடைந்து விடுவானோ என்று.
ஹரீஷின் எண்ணத்திற்கு எதிர்மாறாய் செல்வராஜை கூர்ந்து கவனித்து கொண்டிருந்த அபிமன்யு பின் ஒரு புன்னகையளித்து விட்டு " எங்க விசாரணைக்கு ஒத்துழைச்சதுக்கு ரொம்ப நன்றி டாக்டர். நாங்க வரோம் " என எழுந்து ஹரீஷிடம் எதுவும் கூறாமல் அங்கிருந்து வெளியேறினான்.
வெளியே அமர்ந்திருந்த விபுன்யா விருவிருவென வெளியே வந்த அபிமன்யுவை புரியாமல் பார்க்க அவளை இழுத்து கொண்டு அவனை பின் தொடர்ந்து ஓடினான் ஹரீஷ்.
மருத்துவமனையின் வாயிலை தாண்டி காலை வைத்த அடுத்த நொடி அபிமன்யு சூடிக் கொண்டிருந்த புன்னகை கானலாய் மறைந்திருந்தது. ஹரீஷை அவன் தேடும் முன்பே அவன் முன் வந்து நின்றவன் " அவரு சொன்னதெல்லாம் பொய்யா உண்மையா?? " என ஹரீஷ் அவனிடம் கேட்க அவனை ஒரு பார்வை பார்த்த அபிமன்யு " எல்லாமே பொய் தான். அவருக்கு என் ஆதிய தெரியும். ஆனா தெரியாதுன்னு பொய் சொல்றாரு " என வார்த்தைகளை பல்லிற்கிடையே கடித்து வீசினான்.
" விபு இங்க உண்மையாவே ஏதோ தப்பா நடக்குது. எங்களுக்கு உன்னால தான் உதவி பண்ண முடியும். நீ இந்த ஹாஸ்பிட்டல் உள்ள போயாகனும். உன்னால ஆதாரம் சேகரிக்க முடியும் தானே??? " என ஹரீஷ் விபுன்யாவை பார்த்து கேட்டதும் " கண்டிப்பா என்னால முடியும். ஆனா எப்படி உள்ளப் போறது அதுக்கு மட்டும் எதாவது வழி சொல்லு " என அவள் உறுதியாய் கூறி விட்டு வழியை ஹரீஷிடமே கேட்டாள்.
" நீங்க உள்ள ஈசியா போய்டலாம் மா. லினா இன்னும் இங்க வேலை பார்த்துட்டு தான் இருக்காளான்னு தெரியல ஆனா அவளுக்கு தெரிஞ்சவங்களால நீங்க உள்ள போக முடியும் " என அபிமன்யு விபுன்யாவிடம் கூறிக் கொண்டிருக்கும் போதே அப்புறமாய் நடந்து வந்த ஒரு பெரியவர் தெரியாமல் அவரது செல்பேசியை அபிமன்யுவின் காலடியில் போட்டு விட, அதை அவர் குனிந்து எடுக்கும் முன் குனிந்து எடுத்த நம் நாயகன் அதை அவரிடம் நீட்டினான்.
" ரொம்ப நன்றி அபிமன்யு தம்பி " என கூறிவிட்டு தன் செல்பேசியை வாங்கிவிட்டு அவர் செல்ல ஒரு நிமிடம் அவரை உருத்து நோக்கிய அபிமன்யு வேகமாய் சுற்றி நோக்கி விட்டு ஹரீஷ் மற்றும் விபுன்யாவை தன் ஜீப்பில் ஏறக் கூறினான்.
அவர்களும் வேகமாய் ஏறிக் கொண்டதும் வண்டியை கிளப்பிக் கொண்டு அந்த மருத்துவமனையை விட்டு வெளியே சென்றவன் ஒரு ஓரமாய் வண்டியை நிறுத்தி விட்டு வேகமாய் தன் செல்பேசியை எடுத்தான். " என்னாச்சு ஸர்?? " ஹரீஷ் புரியாமல் அவனிடம் வினவ அபிமன்யு காட்டியதென்னவோ ஒரு துண்டு சீட்டை மட்டும் தான். அந்த பெரியவர் அவரது செல்பேசியை வாங்கும் முன் அவன் கரத்தில் திணித்த துண்டு சீட்டு தான் அது.
அதில் ஏதோ ஒரு எண் எழுதப்பற்றிருக்க அதை செல்பேசியில் அழுத்தி யாருக்கென்றே தெரியாமல் அழைப்பு விடுத்தான் அபிமன்யு.
" தம்பி, நீங்க ஆதி அம்மாவோட புருஷன் தான?? " என எடுத்ததும் அதே பெரியவர் கேட்க " ஆமா " என தயங்காமல் பதில் அளித்தான் அபிமன்யு.
" தம்பி, நானும் இந்த ஆஸ்பத்திரில தான் வேலை பார்க்குறேன். ஆதி அம்மா ரொம்ப நல்லவங்க. மூணு வர்ஷத்துக்கு முன்னாடி அந்த அம்மா ஏதோ கஷ்டத்துல இருந்துச்சு. அப்போ உண்மையாவே எங்க பெரியையா கிட்ட கை நீட்டுச்சு தான். ஆனா அன்னைக்கு அந்த ஐயா என்ன செஞ்சாருன்னும் தெரியல தம்பி . இந்த ஆஸ்பத்திரில நிறைய பேரு பொசுக்கு பொசுக்குன்னு சாகுறத பார்த்து தான் அந்த அம்மா ஐயா கிட்ட ஏதோ கேட்டாங்க. ஆனா அவரு தனியா கூப்பிட்டு போய் ஏதோ பேசுனாரு. அப்போ தான் அம்மா கை ஓங்குனாங்க. ஆதி அம்மா மேல மட்டும் தப்பிருக்காது. ஆஸ்பத்திரி முழுக்க கமெரா இருக்குத் தம்பி. அதான் என்னால நேருல பேச முடியல " என அவர் தனக்குத் தெரிந்த அனைத்தையும் கூற அவருக்கு எப்படி நன்று கூறுவதென்றே தெரியவில்லை நம் நாயகனுக்கு.
இறக்கும் போது பல கெட்ட பெயர்களை வதந்தியினால் பெற்றிருந்தாலும் தன் மனைவி வாழும் பொழுது பல நல் உள்ளங்களை சம்பாதித்திருக்கிறாளென்ற நிம்மதியும் பெருமையும் அவன் மனதில் ஒரு பரவசத்தை பரப்பியது.
அன்று மதியம் காவல் நிலையத்தில் அமர்ந்து ஹரீஷும் அபிமன்யுவும் பழைய காணொளிகளை பார்த்து கொண்டிருக்க கல்யாணின் செல்பேசியின் பூட்டை திறந்திருந்தாலும் உள்ளிருக்கும் பெரும்பாலான செயலிகளுக்கு அவன் பூட்டிட்டிருந்ததால் எதற்கும் திரவு எண் தெரியாமல் அபிமன்யுவால் எதையும் செய்ய முடியவில்லை.
" அபி ஸர், சம்பத் வேலை பார்க்குற இடத்துலேந்து காள் பண்ணாங்க. சிஸ்டம் சரி பண்ணீட்டாங்களாம். வாங்களேன் போய் பார்த்துட்டு வந்துடலாம் " என ஹரீஷ் அழைக்க " இல்ல ஹரீஷ். நீங்க போங்க நான் அதுக்கு முன்னாடி ஒரு இடத்துக்கு போகனும் " என மறுத்துவிட்டு ஹரீஷ் கிளம்பிய பின் தனது வண்டியை எடுத்து கொண்டு எங்கோ கிளம்பினான் அபிமன்யு.
கதிரையில் சாய்ந்து கத்த இயலாமல் அழுது அழுது வீங்கிய கன்னத்துடன் முகமெல்லாம் இரத்தமாக கிடந்தான் முருகேஷ். அவன் படும் வேதனையை பார்த்து ஒவ்வொரு நொடியையும் இரசித்து இரசித்து சிறு கத்தியால் அவனது தோலில் தனது கலையை காட்டிக் கொண்டிருந்தது அவ்வுருவம்.
" என்ன சாகடிச்சிடு, தயவு செஞ்சு என்ன சாகடிச்சிடு. ப்லீஸ் என்ன சாகடிச்சிடு " என அவன் கெஞ்ச கெஞ்ச முருகேஷிற்கே அந்த ஏழு நாட்கள் " என்ன கொன்னுடுங்க, தயவு செய்து என்ன கொடுமை படுத்தாம இப்போவே கொன்னுடுங்க " என விடாமல் கதறிய ஆதியின் கதறல் ஓங்கி ஒலித்தது.
உருவம் அவ்வெதற்கும் பதிலளிக்காமல் " ஒரு விஷத்த கண்டுப்புடிக்க தான டா எங்கள இவ்ளோ கொடுமை படுத்துனீங்க??? பணம் பணம் பணம். மருத்துவத்துல கூட இப்போ பணம். முதல்ல இரத்தம். இரண்டாவது உடல் உறுப்பு. அப்பறம் தோலும் வியாபாரமாய்டுச்சு. உங்களால என்னோட முகம் எப்படியிருக்கு பார்த்தியா டா நீ?? உங்களால உங்க அஞ்சு பேரால மட்டும் நான் என் வாழ்கையையே இழந்துட்டேன் டா. எத்தன உயிர்?? எத்தன கண்கள்?? நூறுக்கும் மேல கொலை செஞ்சது என்னோட நிறுத்துறதுக்காக தான் இல்லையா?? ஆனா அங்க இருந்துச்சு பார்த்தியா ஆப்பு அவன் ஆசை பட்ட எதையும் உங்களால கண்டுப்புடிக்க முடியல. ஆனா இப்போ நீ எப்படி தெரியுமா சாகப் போற?? எத கண்டுப்புடிக்கிறதுக்காக அத்தன உயிர ஈவு இரக்கமே இல்லாம கொன்னீங்களோ அத வச்சே தான் " என குரூரமாய் கூறிக் கொண்டிருந்த அவ்வுருவம் அதற்கு மேலும் தனது வெறியை அடக்க இயலாமல் அந்த குழாய்களை அவனது இரு கண்களிலும் அழுத்தத்துடன் புகுத்தி அவனை கதற வைத்தது.
தொடரும்...
DhiraDhi ❤