குறுந்தகவல் உரையாடல் எதிரிகளாக இருந்த அபி தினேஷின் நட்பு வித்து முளைக்கத் தொடங்க வைத்தது.
அடுத்த நாள் அபி ப்ரொஜக்டை ஒப்படைத்தாள்.
நாட்கள் விரைவாக ஓட, அவர்களது பாடசாலைக்கு விடை கொடுக்கும் நாளும் வந்தது.
இனி வகுப்பு சகபாடிகளை எங்கே காண்பது என்றும் தவிப்பும் காணப்பட்டது. அபியின் ஆட்டோகிராஃப் எல்லோரிடமும் சென்று தினேஷின் கைக்கும் வந்தது.
"மட்டையில் எழுதுகிறேன். மண்டையை போடும் வரை என்னை மறவாதே."
என்று கவரில் வித்தியாசமாக எழுதி விட்டு,
உள்ளே ஓர் பக்கத்தில் ஏதாவது எழுத வேண்டும் என்று மனம் கூறினாலும் வார்த்தைகளுக்கு பஞ்சமானது.
உடனே, கூகுளில் தேடி,
" இஃப் யூ மே மிஸ் மை வொய்ஸ்,
கால் மீ,
இஃப் யூ மே மிஸ் மை ஃபேஸ்,
மீட் மீ,
பட்
இஃப் யூ மே மிஸ் மை ப்ரெண்ட்ஸ் சிப்,
நெவர் சேர்ஸ் மீ எனிவெயார்,
பிகோஸ் ஐ வில் லிவ் இன் யுவர் ஹார்ட்."
என்று எழுதி, அவனது கையொப்பம், அவனது முகவரி, வீட்டு தொலைபேசி இலக்கத்தையும் எழுதினான்.
பாடசாலை பிரியாவிடை வைபவத்தில் தினேஷ் அனொன்ஸ்ஸராகவும்,
நெக்லஸ் ட்ராமாவை எல்லாருக்கும் பார்வையிட கூறிவிட்டு பின்னால் இருந்த மேடையில் இருந்து படியில் இறங்க, நெக்லர்ஸ் ட்ராமாவின் கதாநாயகியான அபி யாரிடமோ பேசிக்கொண்டு முன்னே வரும் தினேஷை காணாது அவன் மேல் மோதி தட்டுதடுமாறி விழ, அவளை ஒரு வலிமையான கரம் தாங்கியது.
நீல நிற தாவணியில் ஒரு அழகு தேவதையாக அவள் அருகில் தென்பட, தினேஷின் மனதோ அலை மோதின. அப்படியே தன்னவளை இவ்வாறு இதற்கு முன்னே கலர் dress இல் பார்த்ததே இல்லையே. அப்படியே அவளை கவ்வி செல்ல வேண்டும் போல் இருந்தது.
இரு கண்களும் ஒன்றை ஒன்று நோக்க, அபிக்கு அவனை பார்க்கவே ஒருமாதிரி போய்விட்டது.
ஆனாலும் அன்று தான் அவனை இவ்வளவு அருகில் பார்த்து இருக்கிறாள்.
ஓரளவு உயரமான திடகாத்திரமான உடம்பு, செழிப்பான புருவம், கூர்மையான கண்கள், கண்களில் கொஞ்சம் திமிர், அளவான மூக்கு, இப்போது தான் முளைக்க ஆரம்பித்து இருக்கின்ற மீசை, ஜிம் செய்த ஆட்களை போன்ற புஜங்கள். பெரிதாக அழகு இல்லாவிட்டாலும் திரும்பி பார்க்க செய்பவனாக தான் இருக்கிறான்.
ஓர் அந்நிய ஆணை முதல் முறையாக உன்னிப்பாக பார்த்ததும், அவளை தாங்கியது அவளை மெய் சிலிர்க்க வைத்தது.
அபி சுதாகரித்துக் கொண்டு எழும்ப, அவளது முக சுபாவம் புரிய,
"என்னடி, இப்படி வேண்டுமென்று என் மேலே மோதி விழுகிறாய், உனக்கு ரொம்ப தான் ஆசை போல, ஆனாலும் அபி, கொஞ்சம் சாப்பிடுவதை குறைத்து கொள், அதாவது வைட்டை கொஞ்சம் குறைக்க பாரு" என்று ஓர் லுக் ஒன்று விட்டு அவ்விடத்தில் இருந்து சென்றான். அவனை முறைத்து கொண்டு திட்டிக் கொண்டே அபி மேடையில் ஏறி நடித்தாள். அவளது நடிப்பு எல்லாரையும் மனதையும் கொள்ளை அடித்தது.
அந்த ட்ராமாவின் கதா நாயகனுடன் தினேஷிற்கு பொறாமை பொங்கியது. அந்த இடத்தில் நான் இருந்தால் எப்படி இருந்து இருக்கும்.
எத்தனையோ க்ரூப் ட்ராமா நடித்து இருக்கிறோம். ஆனால் அபியும் நானும் இதுவரை ஒன்றாக நடித்ததே இல்லையே. ஒரு வேளை கடவுள் லைவ்ஃ இல் இவளையும் என்னையும் ஜோடி சேர்க்கவோ என்னமோ? என்ற நினைப்பு போக வானில் பறந்தான் தினேஷ்.
தொடரும்...