மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seid...

By _meera99

339K 13.1K 6.5K

சக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு.... More

❤ 1 ❤
❤ 2 ❤
❤ 3 ❤
❤ 4 ❤
❤ 5 ❤
❤ 6 ❤
❤ 7 ❤
❤ 8 ❤
❤ 9 ❤
❤ 10 ❤
❤ 11 ❤
❤ 12 ❤
❤ 13 ❤
❤ 14 ❤
❤ 15 ❤
❤ 16 ❤
❤ 17 ❤
❤ 18 ❤
❤ 19 ❤
❤ 20 ❤
❤ 22 ❤
❤ 23 ❤
❤ 24 ❤
❤ 25 ❤
❤ 26 ❤
❤ 27 ❤
❤ 28 ❤
❤ 29 ❤
❤ 30 ❤
❤ 31 ❤
❤ 32 ❤
❤ 33 ❤
❤ 34 ❤
❤ 35 ❤
❤ 36 ❤
❤ 37 ❤
❤ 38 ❤
❤ 39 ❤
❤ 40 ❤
❤ 41 ❤
❤ 42 ❤
❤ 43 ❤
❤ 44 ❤
❤ 45 ❤
❤ 46 ❤
❤ 47 ❤
❤ 48 ❤
❤ 49 ❤
❤ 50 ❤
❤ 51 ❤
❤ 52 ❤
❤ 53 ❤
❤ 54 ❤
❤ 55 ❤
❤ 56 ❤
❤ 57 ❤
❤ 58 ❤
❤ 59 ❤
❤ 60 ❤
❤ மாயவள் அவள் ❤
Thanks for your love and support ❤
♥️

❤ 21 ❤

5.5K 257 150
By _meera99

❤இருதயம்
துடிக்கவில்லையடி
உனை கண்ட நொடி..
மறந்துதான் போனதோ
துடிப்பையும்..
ரகசியமாய்
தவிக்கிறேன்
மாயவள் உன்னால்..❤

என்றுமில்லா முகமலர்ச்சியுடன் அம்மா என்று வந்தவனை பார்க்க சாவித்ரிக்கோ சந்தோஷம் தாங்கவில்லை..காரணம் அறியாவிட்டாலும் அவனது முகமலர்ச்சியை பார்க்கவே போதுமானதாக இருந்தது அவரிற்கு.

"வா சக்தி.. இரு காபி தாரன்.." அவர் சொல்லிவிட்டு சமயலறைக்குள் நுழைய மேசையில் சமயலறைக்கு பக்கமாய் போட்டிருந்த கதிரையில் சென்றமர்ந்தான் சக்தி.

முழித்துக்கொண்டே அவன் எங்கே இருப்பானோ என்று படியிறங்கி வந்த சாரு இவனைக்கண்டு விட மெதுவாய் பின்னால் பதுங்கி பதுங்கி வந்து சமயலறைக்குள் நுழைய முயல இவள் பதுங்கி வந்ததை முன்னால் இருந்த கண்ணாடியூடு பார்த்துக்கொண்டிருந்த சக்தி அவள் கடக்கப்போகும் நொடி சரியாகப்பற்றினான்.

முன்னால் திரும்பி அமர்ந்தவாறே சரியாக பின்னால் கை நீட்டி தன் கை பற்றிய சக்தியையே திகைத்து நோக்கினாள் சாரு.

மெதுவாய் இவள் பக்கம் திரும்பியவன்.." ஆமா எதுக்கு இப்பிடி பதுங்கி பதுங்கி வர்ர? " என்று கேட்க மேலும் கீழுமாய் கண்ணை உருட்டியவள்.." அது அது..அது இருக்கட்டும் நீங்க எதுக்கு  என் கைய கைய பிடிக்கிறீங்க?" திரும்பி சாரு கேட்டாள்.

அவளை ஆழ நோக்கியவன் தன் பற்றிய கையாலயே அவள் கை மணிக்கட்டை மெதுவாய் வருடிக்கொண்டே "சும்மா தான்.." என்றான்.. இவளோ என்றும் இரும்பிப்பிடி பற்றும் சக்தி இன்று பற்றியிருக்கும் விதம் ஏதோ உணரச்செய்ய அவன் கைப்பிடியில் இருந்த தன் கையை மறு கையால் விலக்க முயன்று கொண்டே அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

வழமை போலவே நிலாவும் சதீஷும் இங்கு நடப்பதைக்கண்டு வாய் பிளந்து பார்த்துக்கொண்டு இருந்தனர் படிக்கட்டு இடை வழியே.

"அண்ணாவ பேய் விரட்ட கூட்டிட்டு போலாம்டா.."கவலையாய் கூறிய நிலாவை முறைத்தவன்.."இப்பதான்டி அவன் மனுஷனாகவே மாற ஆரம்பிச்சிருக்கான்..அதையும் நீ விரட்டிறாம கம்முன்னு இரு..சீன் பார்த்தமா போனமான்னு இரு.." சொல்லிவிட்டு மீண்டும் அங்கு நடப்பதை கவனிக்கத்தொடங்கினான் சதீஷ்.

"சார்...அம்மா.." சாரு கூற சட்டென கையை விட்டான் சக்தி..
கிடைத்த சந்தர்ப்பத்தில் சமையலைக்குள் பதுங்கிக்கொண்டாள் சாரு.

அவள் மூச்சிரைக்க ஓடி வருவதைக்கண்ட சாவித்ரி அவள் நெற்றியில் கைவைத்துப்பார்த்து விட்டு என்னாச்சி என்று கேட்க..

"ஒன்னுமில்லம்மா காபிபி..." என்றாள் இருக்கும் பற்கள் அத்தனையும் வெளியில் தெரிய..
"இதுக்குதானா இந்த ஓட்டம்.."அவர் கேட்டு விட்டு திரும்பி காபியை கையில் கொடுக்க மீண்டும் கனவுலகத்திற்கு சென்றிருந்தாள் சாரு.

"சாரு என்ன யோசிக்கிற?" அவர் கேட்க சாருவோ "எந்த தாயிற்கு தான் தாங்க முடியும் தன் மகன் மூளையில் கோளாறு என்றால்..நாமதான் இத யாருக்கும் தெரியாம சரியாக்கனும்.."  என நினைத்துக்கொண்டு "ஈஈஈஈ ஒன்னுமில்லம்மா" என்றாள் காபி கப்பை வாங்கியபடியே.

இவளுக்கு என்னாச்சி என்று பார்த்துவிட்டு சக்திக்கு காபி எடுத்துக்கொண்டு நகர்ந்தார் சாவித்ரி.

ஒருவாரு அடுத்த அரைமணிநேரமும் சக்தியின் கண்ணில் அகப்படாமல் இருந்தவள் அவன் சென்ற பின்னே சிவாவுடன் கம்பனிக்கு சென்றாள். உள்ளே செல்லும் போதே அங்கு வந்த டேவிட்..சார் கூப்பிட்டாரு என்று சொல்லிவிட்டு செல்ல படபடப்புடனே அவன் அறைக்கு சென்றாள் சாரு.

அங்கு சக்தி விட்டத்தை பார்த்து சிரித்துக்கொண்டிருப்பதை கண்டவள் கவலையுடன் அவன் அருகில் சென்று "சார்.." என்றாள்.
அதே நேரம் அங்கே வினோதும் வந்து கதவில் தட்ட.."கம் இன்.." என்றான் சக்தி.

இருவரையும் பார்த்து விட்டு பேசத்தொடங்கினான் அவன்.
" அடுத்து வந்திருக்க திருமண ஆடர் இன்னும் இரண்டு வாரத்துல ஒப்படைக்கனும். என்ட் அதுக்கான துணி இன்னக்கி ரெடியா இருக்கும். Address a நான் wtsp grp இல் போட்டுடன். உங்க டீம்ல யாராவது இரண்டு பேர் போங்க இப்ப போனால் தான் ஈவ்னிங்குள்ள வந்துடலாம். ஓகே.."

இருவரும் சம்மதமாய் தலை அசைத்துவிட்டு நகர.."one minute.."என்றான் சக்தி..இருவரும் திரும்ப.."வினோத் நீங்க போகலாம்...சாரு கொஞ்சம் இரு." அவன் சொல்ல யோசனையுடனேயே வெளியே வந்தான் வினோத்.

தயங்கித்தயங்கி நின்று கொண்டிருந்த சாரு அருகில் ஒரு கதிரையை இழுத்துப்போட்டவன் அமருமாறு சைகையில் கூற அவனைப்பாரத்தவாறே அமர்ந்தாள்.
மேசையில் ஏறி அமர்ந்த சக்தி ஒரு காலை தூக்கி அவள் அமர்ந்திருந்த கதிரையின் கைப்பிடியில் வைக்க கண்விரித்துப்பார்த்த சாரு..பின் மூக்கை சுருக்கிக்கொண்டு.."சார் கால கீழ போடுங்க.. சாகஸ் கழுவவே இல்லையா.." என்று கேட்க..அவனோ பலமாக சிரித்தான். பல்வரிசை தெரிய மனம்விட்டு சிரித்தவனை சாரு வியந்து நோக்க அவளுக்கு மேலாக வியந்து பார்த்துக்கொண்டிருந்தது இருவிழிகள் ஆனால் அவ்விழிகளில் ஆச்சரியத்துக்கும் மேலாக இவர்களது நெருக்கம் கண்டு வலியும் கலந்திருக்க வந்த வழியே வந்த சுவடு தெரியாது திரும்பியது.

நீண்ட நேரம் வினோவைக்காணாது போக தேடிக்கொண்டே வந்த ரம்யா அவன கென்டீனில் இருப்பதைக்கண்டு அவனமர்ந்திருந்த மேசையில் சென்றமர்நதாள்.

அப்பொழுதும் அவன் உணர்வின்றி இருக்க.."வினோ.." அவன் கைபற்றி அழைக்க சட்டென தன்னிலை அடைந்தவன் தொண்டையை சரி செய்து கொண்டு நிமிர்ந்தான்.

"ஆர் யு ஓகே..?" ரம்யா கேட்க..அவள் கண்களை நிமிர்ந்து பார்த்தவனிற்கு ஏனோ மறைக்கத்தோணவில்லை..இல்லை என மெதுவாக தலையசைத்தான்.
கொஞ்ச நேரம் எடுத்துக்கொண்டவன்.."நம்ம பாஸ் சாருவ லவ் பன்னுறாரு.."என்று விட்டு அமைதியானான்.

ரம்யாவிற்கோ என்ன சொல்வதென்று தெரியவில்லை..இருந்தும் மெதுவாக அவனிற்கு புரிய வைக்கும் நோக்கில் தொடர்ந்தாள்.
"இப்ப அதுக்காக தான் பீல் பன்னிட்டு இருக்கயா..சரி உனக்கு சாரு இல்லன்னு கடவுள் முடிவு பன்னிடாரு.. இப்போ என்ன பன்னுறது? ஒன்னு எப்பவும் நினைவுல வெச்சிக்கோ வினோ..காதல்ல ஒருநாளும் தோல்வின்ன ஒன்னே கிடையாது..காரணம் நம்மளோட துணைய காதலிக்கிறது மட்டும் தான் காதல்.. அந்த துணைய கடவுள் நாம பிறக்கும் போதே எழுதி வச்சிட்டாரு.. அதுக்கு இடையில இட் மீன்ஸ் இப்ப உனக்கு சாரு கூட வாழனும் தோணிச்சி அது சரி ஆனால் எதுனால ? உனக்கு காரணம் இருந்திச்சில்ல.. அவளோட குழந்தை செயல உன் லைப் லாங் நீ இரசிக்கனும் சொன்ன..அப்படி ஒரு ரீசனால எப்பவும் எங்களோட துணைய காதலிக்கனும் தோணாது.. ஈவன் அதுக்கு பெயர் காதலே இல்ல..உனக்காக ஒருத்தி உன் மேல அவ மொத்த அன்பையும் உனக்காக மட்டுமே சேர்த்து வச்சிட்டு உனக்காக காத்திட்டு இருப்பா வினோ.. அவளுக்கு நீ துரோகம் பன்னலாமா? ஏன் யோசிச்சி பாரு உன் மனைவி இப்போ இன்னொருத்தர நினைச்சி பீல் பன்னிட்டு இருந்தா உனக்கு ஓகே வா?" அவள் கூறியதை அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்த வினோ அவளது கடைசி வாக்கியத்தில் ரம்யாவைப்பார்த்து முறைக்கவும் சிரித்தவள்.."பார்டா கோபத்த..நீ மட்டும் பீல் பன்னுவியாம் அதே அவ பன்ன கூடாதா..சரி சரி உனக்கு புரிய வைக்க தான் சொன்னன்..அப்படி எல்லாம் இருக்க மாட்டாங்க..ஓகே வினோ மெடிரியல் எடுக்க போகனும்.. ஒன்னும் யோசிக்காத டாட்டா.."

அவள்..அவன் கண்களில் தெளிவைக்காண நிம்மதியாக எழுந்து நடந்தவள் வாசல் வரை சென்று நின்றாள். திரும்பி சுற்றி பார்க்க..அங்கு இவர்களைத்தவிர வேறு யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு இவன் புறம் திரும்பி.."வினோ.." என்று அழைத்தாள்.. அவன் நிமிர்ந்து பார்க்க.."உன் மனைவி உனக்காக மட்டும் தான் காத்திட்டு இருப்பா..அப்புறம் அவ நேம் ரம்யாவா கூட இருக்கலாம்.." அவள் கூறிவிட்டு ஓடி விட..நெற்றியை சுருக்கி அவள் கூறியதை யோசித்தவனுக்கு புரியவே சில கணங்கள் எடுத்தது..

நம்பமுடியாதவனாய் ரம்யா என்றவாறு இவன் எழுந்து செல்ல அவளோ லிப்டினுள் ஏறி சென்றிருந்தாள். பரபரத்த மனதோடு லிப்டிற்காக காத்திராமல் படிக்கட்டுக்களை நோக்கி புன்னகையுடனே  நடந்தான். ஆனால் அவனுக்கோ தெரியவில்லை தன் புன்னகையின் வாழ்நாள் சில காலம் தான் என்று.

Continue Reading

You'll Also Like

8.7K 818 43
பதினாறில் பாலையில் நின்றிருந்த கள்ளிச்செடிகளின் வரிசை.. அதோ அந்த ஆரம்ப வரிசையில் ஒரு செடியில் பெரிதாய் ஒரு பூ.. அதை மறைக்கத்தானோ கொஞ்சம் கொஞ்சமாய்ப்...
25.9K 797 44
கல்லூரியில் காதல் வந்தும் காட்டிக் கொள்ளாமல் பிரிந்த இருவர். பின் அவள் செய்த செயலால் அவள் வேலை செய்த கம்பனியையே விலைக்கு வாங்கி. அவளறியாமலே நடக்கும்...
13.1K 354 36
இது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்
111K 4.8K 37
இது என்னுடைய I DON'T LIKE U COZ' U R TOO HANDSOME கதையின் தமிழாக்கம்.