💞 17 💞

13 0 0
                                    

தூக்க மாத்திரையின் வீர்யத்தில் அனைவரும் நன்றாக உறங்கி கொண்டிருந்தனர். பௌஸியா மற்றும் அம்ரீன் தான் விழித்து கொண்டிருந்தனர்.

பௌஸியா , " ஏய் அம்ரீன் , என்னடி எல்லாரும் இப்டி தூங்குறாங்க? "

அம்ரீன் சப்தமாக சிரித்து கொண்டே , "எல்லா நான் நேத்து பாலுல கலந்த தூக்க மாத்திரையோட வேலை ம்மா!  " என்றதும் பௌஸியா அதிர்ந்தார்.

யாராவது வருகிறாரா? என்று பார்த்துவிட்டு , " எதுக்கு டி இப்டி பண்ண? " என பௌஸியா கேட்க

அம்ரீன் , " எல்லா ஷாஜிதாவோட உயிரை காப்பாத தாம்மா " என்றதும்

பௌஸிதா அதிர்ச்சியுடன் , " என்னடி சொல்ற ? ஷாஜிதாவுக்கு என்ன? " என கத்திய தன் அம்மாவின் வாயை பொத்தி

" அல்லாஹு அம்மா வாயை கழுவு! ஷாஜிதாவுக்கு ஒன்னுமில்ல. அவ நல்லா இருக்கு நா என்ன சொல்றேன் முழுசா கேளு! " என கூறிய அம்ரீனை அமைதியாக பார்த்தார் , பௌஸியா.

அம்ரீன் யாராவது வருகிறாரா? என பார்த்துவிட்டு பௌஸியாவின் காதில் நேத்து நடந்த அத்தனையும் ஒன்று விடாமல் கூறி முடித்தாள்.  பௌஸியா அத்தனையும் கேட்டு மலைத்து போய் நின்றார்.

பௌஸியா ,  "அம்மான்னு ஒருத்தி இருந்தும் அவளை அநாதையா விட்டுட்டேன். எனக்கு மன்னிப்பே கிடையாது " என அழுத தன் தாயை , " அம்மா விடு.  இனி நீ தைரியமா இரு ம்மா! யாருக்கும் பயப்படாத. இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்லாத சரியா! " என அம்ரீன் கூற

பௌஸியா, " கண்டிப்பா அம்மு, இனி நானும் தைரியமா இருப்பேன். இதபத்தி நா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். சரியா " என்றவுடன் அம்ரீன் தன் அம்மாவின் இரண்டு கன்னங்களையும் கிள்ளி , " இது தான் என் செல்ல அம்மா உம்ம்ம்மா! நா போய்  காலேஜ்க்கு கிளம்புறேன். அப்றம் எம்டன் எழுந்தாரு ஆஆஉஉஉ ன்னு கத்த ஆரம்பிச்சிடுவாரு " என கூறிவிட்டு கல்லூரிக்கு கிளம்பினாள்.

You'll also like

          

ஏழு மணிபோல் அனைவரும் எழுந்தனர். தலை ஏனோ பாரமாக இருப்பது போல் உணர்ந்தனர். நேற்று அலைந்து திரிந்த காரணத்தால் இது ஏற்பட்டிருக்கிறது என நினைத்து கொண்டனர்.

அனைவரின் நிலையையும் பார்த்து அம்ரீன் தன் அறையில் விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்தாள். சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை அம்ரீனால்.

அதன்பின் கல்லூரிக்கு கிளம்பி கொண்டு வர , ஹசன் அம்ரீனை அழைத்து கொண்டு சென்றார்.

அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். ஃபிர்தவுஸ் மற்றும் யாசருக்கு விருந்து பலமாக இருந்தது. இருவரையும் மனநிறைவோடு பரிமாறினார்கள்.

சாப்பிட்டு முடித்ததும்  , "ஏன் மா ஃபிர்தவுஸ் நீ ஏன் கல்யாணத்தை சீக்கிரமா வச்சிக்கனும் அடம்பிடிச்ச?" என அஸ்மா கேட்க , ஃபிர்தவுஸ் சிரித்து கொண்டே அதற்கான காரணத்தை சொன்னதும் மொத்த வீடும் அமைதியானது.

அஸ்மா , "இப்ப அந்த பொண்ணு தனியா எப்டி இருக்கு? எந்த பாதுகாப்பும் இல்லாம? "

யாசர் , " அந்த புள்ளை தன்னோட தாத்தா காசுல சாப்பிட பிடிக்காம தினமும் நோன்பு வச்சிட்டு வெறும் பழங்களை மட்டும் தன்னோட உணவா எடுத்துக்கிறா "

லத்தீப், "ம்ஹ்ம் பத்தொன்பது இல்லன்னா இருபது வயசு இருக்கும் அந்த பிள்ளைக்கு... கஷ்டப்படுற வயசா அது? சந்தோஷமா துள்ளி திரிய வேண்டிய வயசுல அந்த பிள்ளை எவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சுட்டு. "

யாசர் , "அவளுக்கு பாதுகாப்பு கொடுக்க தா மாமா நேத்து சமீர் கிட்ட உதவி கேட்டோம்"

சமீர் , " ஆமா ப்பா அந்த பொண்ணுக்கு நான் தான் பாதுகாப்பு கொடுக்க போறேன்..  அதை பத்தி தான் நேத்து பூரா அலைஞ்சோம் "

அஸ்மா , " டேய் தங்கம் அந்த பிள்ளையை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திருப்பா நாம பாதுகாப்பு கொடுக்கலாம்.  "

உறவே உயிராய்Where stories live. Discover now