🔱யின்
💜மின்சார கண்கள்💜Part.. 6️⃣
💜இன்று அதிகாலை மயங்கிய நிலையில் முல்லையை சஞ்சய் தன்வசம் அழைத்து செல்ல......கதிர் அன்றைய நாள் காலை பொழுது ஹோட்டலில் வேலை செய்து கொண்டு இருக்க......💜
மாயா : டேய் என்ன பண்ற
கதிர் : என்ன கேட்ட
மாயா : உன்ன தான் டா என்ன பண்ற
கதிர் : அது அவங்க ஒரு கிலோ லட்டு கேட்டாங்க அதை போட்டுக்கிட்டு இருக்கேன் ....
மாயா : டேய் நீ லட்டு போடுற ....ஆனால் அதை நீ கவர்ல போடல .... தரையில் தான் போட்டுக்கிட்டு இருக்க.. என்னடா ஆச்சு உனக்கு
கதிர் : அது.... ஒன்னும் இல்ல
மாயா : டேய் இங்க பாரு.... என்ன டா கண்ணு கலங்குது
கதிர் : இல்ல நான் தப்பு பண்ணிட்டேன்..
மாயா : என்னடா சொல்ற...அப்ப அந்த பொண்ணு சொன்ன மாதிரி
கதிர் : அது இல்ல டி ..... அந்த பொண்ண நான் இப்படி பண்ணியிருக்க கூடாது ....அவ நைட்டு என்கிட்ட அந்த டாக்குமெண்ட் கொடுக்கும் போது நான் அதை வாங்கி இருக்கணும்..அவள் வெளிய மழையில நைட் எல்லாம் உக்காந்து இருப்பான்னு நான் நினைச்சு கூட பாக்கல... நான் ரொம்ப பெரிய முட்டாள்தனம் பண்ணிட்டேன்
மாயா : டேய் அழாத டா.
கதிர் : இல்ல அவ மயங்கி என்னுடைய இதயத்தில் சாயும் பொழுது என் இதயத்துடிப்பே நின்னு போன மாதிரி இருந்துச்சு...
மாயா : நீ என்னடா....என்னென்னமோ பேசுற
கதிர் : இல்ல எனக்கு என்ன பேசறதுன்னு தெரியல.... மனசு ரொம்ப பாரமா இருக்கு இதுக்கு முன்னாடி நான் இந்த மாதிரி இல்ல
YOU ARE READING
💜மின்சார கண்கள் 💜km💚kc Short Story
Fanfictionஒரு பட கதை சும்மா ஒரு சில மாற்றங்களோடு....