எங்கே என் மனம் ..! எஸ்.ஜோவிதா-3

335 10 0
                                    

3
பெண்கள் வரவிருக்கும் மணநாளிற்கு என்ன வகையான அயிட்டங்கள் செய்யலாம் என பட்டியலிட்டுக்கொண்டிருக்க ஆண்களில் சாரங்கன் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பொறுப்பை ஒப்படைத்தவாறு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார். சிறியவர்கள் குதூகலத்துடன் ஓடிப்பிடித்துக் கொண்டிருக்க. இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் ஏதும் கேட்காதது போல சந்தியா தன்னறையில் புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டு படித்துக் கொண்டிருந்தாள். கண்கள் புத்தகத்தில் இருந்தாலும் மனசு ஒட்டவில்லை. எரிச்சலாக வந்தது.

"பேசாம...நான் ஹரியைத்தான் கட்டிப்பேன்னு சொல்லிடலாமா? அப்புறம் அப்பாவின் கோபத்துக்கு ஆளாக வேண்டும் அவர் வெறுப்பை சம்பாதிக்க வேண்டும்..மகள் என்கிற மாதிரியா என்கூட பழகுறார்..."

"அய்யோ..இந்த ஹரிக்கு ஏந்தான் இந்த ஐடியா வந்ததோ..." புத்தகத்தை அடித்து மூடினாள். மனதில் ஹரி வந்து சிரித்தான்.

"ச்சீ...போடா! என்னால அந்த சந்தோஷை கட்டிக்க முடியாது. அவன் உன் போல இல்லைடா! உன் போல அழகாக பேசத்தெரியுமா? ஜோக் அடிக்கத்தெரியுமா? ஸ்டைலாக சிகரட்தான் புடிக்கத்தெரியுமா....? கேட்டா லண்டன்லே புகைவிடுற காலேஜிலே படிச்சு படிச்சு புகை என்றாலே அலர்ஜி...! "இது போதாதுன்னு சிகரெட்டால வர்ற தீமை என்னென்னு எக்ஸ்பிசன் வைச்சதுல தனக்குத்தான் ஃபஸ்ட் பிரைஸ்னு பெருமை அடிக்கத் தெரியும்...!. இல்லை வேறு என்ன தான் தெரியும்...?"

"அவனுக்கு தெரிஞ்சது எல்லாம் பிசினஸ்... பிசினஸ்...! அப்பாவும் இந்த வீட்லே உள்ளவங்களும் அவனை தலையில தூக்கி வச்சுட்டு ஆடுறாங்க.... எதுக்கெடுத்தாலும் அவன் தான் வேணும்..! அவன் இல்லைன்னா எதுவும் நடவாதது போல.
ஸ்டுபிட்ஸ்.....! உன் அருமை, உன் குணம் இது தெரியுமா இவர்களுக்கு....?" அவனது போட்டோவுடன் பேசிக் கொண்டிருந்தாள் கீழே சிரிப்பலை கேட்டது. எரிச்சல் மூள,

"ச்சே..என்ன சந்தோஷம் பாரு! நம்ம சந்தோஷத்துக்கு தடையா இருக்குறவங்க...! எப்படி இருக்காங்கன்னு பாரு! ஆனா இதுவெல்லாம் எத்தனை நாளைக்கு? நீ தந்த ஐடியா மட்டும் வொர்க் அவுட்டான நீயும் நானும் சந்தோஷவானில் சங்கீதம் பாடுவோம்..." கண்களில் கனவுகளுடன் சிரித்துக்கொண்டாள்.

எங்கே என் மனம் ...! - எஸ்.ஜோவிதா Where stories live. Discover now