💙வி(தே)வை காதல் 💙
Part 40
Next Day Friday Mrng... KV சொன்னது போலவே...3am அளவில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல்.... ஆடம்பரம் இல்லாத புடவையில்.... மகிழினி அவள் அறையில் இருந்து வெளியே வந்தவளை... சிரித்த முகத்துடன்.... தன் காரில் ஏற்றிக்கொண்டு KV...... வண்டியை தன் சொந்த ஊரை நோக்கி விரட்டியவனின் வாகனத்தை... பார்த்ததும் அடித்து தூக்க..... அவன் ஊர் எல்லையில் வனிதாவும் அவளின் தம்பி நாராயணனும் ஏற்பாடு செய்து இருந்த லாரி காத்து கொண்டு இருந்தது....
KV & CM... இருவரும்.... ஊருக்கு கிளம்பியவர்கள்.... பக்கத்து வீட்டில் தன் வீட்டு சாவியை கொடுத்த பின்பு மகிழினி காரின் அருகில் வந்தவள்... தயங்கயப்படி நின்று இருந்தாள்...
என்னாச்சு CM..... வாங்க.. வந்து உக்காருங்க.... ஹாங்... பின்னாடி எல்லாம் வேணா... என் பக்கத்துல உக்காருங்க... இல்லைனா.. நான் கண்ணாடில உங்கள மட்டுமே பார்த்து சைட் அடிச்சிகிட்டு... வண்டியை போய் எங்காவது மோதிட போறேன்... என்று KV சொன்னதும்....
மகிழினி சிறு அச்சதுடனே.... காரின் முன் இருக்கையில் அமர்ந்தவள்.... சீட் பெல்ட்டை போட்டு கொண்டு... கண்கள் மூடி தன் இருக்கையில் சாய்ந்து கொண்டாள்...மகிழினியின் செயலை கண்ட KV.... தனக்குள் சிரித்து கொண்டவன்.... தன் காரை அவன் கிராமத்தை நோக்கி விரட்டினான்...
வழியெல்லாம் கண்களை திறக்காமல்... ஒரு வார்த்தை கூட பேசாமல் வந்த மகிழினியை சீண்டி பார்க்க நினைத்த KV...
ஏன் CM..... ஏன் நீங்க சுடிதார் போடல... ப்ச்.. நீங்க சல்வார்ல வருவீங்கன்னு நினைச்சேன் தெரியுமா.... என்று KV சொல்ல....
ஒழுங்கா.. ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டுங்க... தேவையில்லாத கதையெல்லாம் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்... என்று கடுக்கடுத்த மகிழினி... மீண்டும் கண்களை இறுக்கமாக மூடி கொள்ள....
KV விரட்டிய கார் ஒரு சிக்னளில் நின்றது.....
கார் நின்றும் கூட மகிழினி கண்களை திறக்காதவள்...WOW.... என்ன Structure....!!?? கட்டுனா இப்படி தான் கட்டணும்... என்று ரசித்தப்படி பேசியவனின் குரலை கேட்டு கண்களை திறந்த மகிழினியின் விழிகளுக்கு முன்.... பைக்கில் ஒரு பெண்மணி... தன் ஆண் நண்பரோடு.. Mordern உடையில்... கச்சிதமாக இரண்டு பக்கம் காலை போட்டுக்கொண்டு...தன் நண்பனை கட்டிக்கொண்டு அமர்ந்து இருந்தவளை பார்த்த மகிழினி முகம் சிவந்தவள்...