நறுமணம் 41

4.1K 209 88
                                    

முகி pov:

சாய்ங்காலம் காலேஜ் முடிஞ்சதும் ஸ்வாத்தி சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டேன்....
வெளில கிருஷ்ணா எனக்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தான்....நான் அவன பாத்துட்டு சிரிச்சிட்டே போனேன்....

"யாரோ நல்ல மூட்ல இருக்காங்க போல...."னு கேட்டான்

"ஆமா....ரொம்ப சந்தோஷமா இருக்குறேன்...."னு சொன்னேன்

"காலையில உம்முனு இருந்த....ஆனா இப்போ சிரிச்சிட்டே வர....இந்த மாற்றம் எப்புடி நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்கலாமா....."னு கேட்டேன்

"எல்லாம் ஸ்வாத்தியோட மேஜிக்....அவதான் என் மூட சரி பண்ணுனா...."னு சொன்னேன்

"எப்புடியோ ஒழுங்கா சிரிச்சு பேச ஆரம்பிச்சியே அதுவே போதும்....கிளம்பலாமா...."னு கேட்டான்

நானும் சரின்னு சொன்னேன்.....ரெண்டு பேரும் வீட்டுக்கு போனோம்.....
வீட்டுல பாட்டி தாத்தா மட்டும்தான் இருந்தாங்க....அம்மா அப்பா ரெண்டும் பேரும் இல்லை....

நான் வீட்டுக்கு போனதும் பாட்டி தாத்தாக்கூட உக்கார்ந்து பேசிட்டு இருந்தேன்....
அப்போ நர்மதாவும் நவீனும் ஸ்கூல் முடிச்சிட்டு வந்தாங்க.....நர்மதா முகமே சோர்ந்து போய் இருந்துச்சு.....பாட்டி அதை கேட்கவும் செஞ்சுட்டாங்க....

"நர்மதா ஏன் முகம் வாடிருக்குது.....என்னாச்சு மா...."னு கேட்டாங்க

"பாட்டி அவ நேத்துல இருந்தே அப்புடி தான் இருக்குறா.....என்னன்னு கேட்டா சொல்ல மாட்டேங்குறா....."னு சொன்னான்..

"அப்புடியா நர்மதா நவீன் சொல்றது உண்மையா...."னு பாட்டி கேட்டாங்க...

"அதெல்லாம் ஒன்னும் இல்லை பாட்டி....நான் நல்லாதான் இருக்குறேன்....எனக்கு கொஞ்சம் முடியல தலை வலிக்குது நான் ரூமுக்கு போரேன் பாட்டி....."னு சொல்லிட்டு போய்ட்டா

அவ சொன்னத பாட்டி வேணும்னா நம்பிருக்கலாம் ஆனா என்னால சுத்தமா நம்ப முடியல....எதோ இருக்குதுன்னு யோசிச்சிட்டே உக்காந்து இருந்தேன்....

You'll also like

          

நர்மதா pov:

நான் உள்ள நுழைஞ்சதும் பாட்டி நான் ஏன் டல்லா இருக்குறேன்னு கேட்டாங்க....எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல....தலவலிக்குதுன்னு சொல்லிட்டு நான் ரூமுக்குள்ள வந்துட்டேன்....

உள்ள வந்ததும் கதவ மூடிட்டு அழுதுட்டு இருந்தேன்....
என்னால ப்ரவீன் இப்புடி பண்ணிருப்பான்னு நினைச்சுக்கூட பாக்க முடியல....
எனக்கு மட்டும் ஏன் இப்புடி நடக்குது.....அப்பவே அண்ணாவும் முகியும் அவன நம்பாதன்னு சொன்னாங்க நான்தான் கேட்கல......அவன நம்புனேன்.....அதுக்கு எல்லாம் சேத்து வச்சு என் நம்பிக்கைய சுக்கு நூறா உடைச்சிட்டான்.....

நான் ஸ்கூல் முடிச்சிட்டு ஃப்ரெண்ட்ஸ் கூட நின்னுட்டு இருந்தேன்....அப்போ ப்ரவீன் என்னைய பாக்குறதுக்காக நின்னுட்டு இருந்தான்....
நான் அவன பாத்துட்டு சிரிச்சிட்டே போனேன்...ஆனா அவன் முகமே சரியில்லாம இருந்துச்சு....

"என்னாச்சு டா ஏன் ஒருமாதிரி இருக்குற...."னு கேட்டேன்...

"அதெல்லாம் ஒன்னும் இல்லை....கெஞ்சம் அண்ணாக் கூட சண்டை போட்டுட்டேன்.. மூட் அவுட்....."னு சொன்னான்

"சரி எங்கையாவது போகலாம் வா ரிலாக்ஸா இருக்கும்னு சொன்னேன்...."னு சொன்னேன்...

அதுக்கப்புறம் நானும் அவனும் வழக்கமா போகுற இடத்துக்கு என்னைய கூட்டிட்டு போனான்....அங்க போய்ட்டு ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தோம்.....அப்ப திடிர்ணு அவனோட ஃப்ரெண்ட் அங்க வந்துட்டான்....

"நர்மதா நான் இப்ப வந்துடுறேன்...."னு சொல்லிட்டு ப்ரவீன் அவன் ஃப்ரெண்ட் கூட தள்ளி போய் பேசிட்டு இருந்தான்...

அவன் போனதுக்கு அப்புறம் தனியா என்ன பண்ணுறதுன்னு தெரியல.... அவன் ஃபோன் பக்கத்துலையே இருந்துச்சு....சரி எடுத்து பாப்போம்னு எடுத்தேன்....பாஸ்வெர்ட் கேட்டுச்சு.....என்னவா இருக்கும்னு யோசிச்சிட்டே உக்காந்து இருந்தேன்....

அவனுக்கு அவனோட அண்ணாவ ரொம்ப புடிக்கும் அதுனால அவுங்க பேர போட்டு பாத்தேன் ஓப்பன் ஆகல....அப்புறம் இவன் பேரையும் இவன் அண்ணா பேரையும் சேத்து போட்டேன் ஓபன் ஆகிடுச்சு.....

 நறுமுகை!! (முடிவுற்றது)Where stories live. Discover now