பலி - சிறுகதை
நான் வரலாற்றை விரும்பும் சமகாலவாசி... மயன் என்றிருந்த பெயரினை மதன் என்றாக்கிக் கொண்டவன்.. கல்வெட்டுகளும் சிற்பக்கலைகளிலும் மிகுந்த ஆர்வமுண்டு.. அதன் காரணமாகவே தொல்லியல் துறையில் வரைபகுப்பாய்வாளனாக பணிபுரிகிறேன்.. கையளவு சம்பளம் மனதளவு வேலை.. என நிம்மதியான வாழ்க்கை சலித்துப்போனதோ என்னவோ.
கடந்த ஒருவாரமாக திகில் தரும் பொருள்களை தேடியலைகிறேன் ... அதிர்ச்சியான விசயங்களை ஆர்வமாய் தேடுகிறேன்.. விசித்திரத்தை விரும்புகிறேன்.. விபரீதங்களுக்கு ஏங்குகிறேன்..
இவையனைத்திற்கும் தஞ்சை பெரிய கோயிலும் ராஜனும் தான் காரணம்... ஆம் கடந்த ஒரு வாரமாக தஞ்சை பெரிய கோயிலில் கல்வெட்டு ஆய்வுக்கு அமர்த்தப் பட்டேன்.. ராஜன் என் சக ஆய்வாளன்.. முன்னாள் ஆய்விலும் நாங்கள் இருவரும் ஆய்வு உதவியாளராக இருந்தோம் அப்போதிருந்தே பழக்கம்...
ராஜன் ஒன்று சொல்வான் முன்னோர்கள் தங்களது எதிர்காலத்தை முன்னமே அறிந்துதான் அவற்றை தான் கல்வெட்டில் பதிந்திருப்பதாக சொல்வான் பலவேளைகளில் அவனது இந்த கருத்து மூடத்தனமாக தோன்றினாலும்.. தஞ்சையின் பல கல்வெட்டுகள் அவனது இந்த கருத்தை ஒத்துபோயின..
வலசை பதினாறு வளவன் படிய என்கிற பாடல் குறிக்கின்ற கணக்கும் பிற்கால வரலாற்று கணக்கும் சரிவர பொருந்துகிறது .. நான் இதனை ஒரு எதர்சையான ஒத்துப்போதல் என்று எண்ணினாலும் ராஜன் அதனை அப்படி எண்ணவில்லை.. இதுபோன்ற வாதங்களில் அதிகம் நான் விட்டுக்கொடுத்து விடுவேன்..
தஞ்சை நீங்கள் எண்ணுவது போல் வெறும் கோயிலும் வரலாற்று சின்னம் மட்டுமல்ல அது பல அமானுஸ்ய ரகசியங்களின் கருவூலம் கூட.. தஞ்சை கோயில் பற்றி அங்கிருந்து 23 கிமீட்டர் தெற்கு நோக்கிய தொலைவில் ஒரு கல்வெட்டு இருப்பதாகவும் அதை ஆய்வு செய்து அரசுக்கு தெரிவிக்கவும் துறை மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது.. ராஜன் என்னை மட்டும் அனுப்பினான்..
YOU ARE READING
பலி - சிறுகதை
Historical Fictionநான் வரலாற்றை விரும்பும் சமகாலவாசி... மயன் என்றிருந்த பெயரினை மதன் என்றாக்கிக் கொண்டவன்.. கல்வெட்டுகளும் சிற்பக்கலைகளிலும் மிகுந்த ஆர்வமுண்டு.. அதன் காரணமாகவே தொல்லியல் துறையில் வரைபகுப்பாய்வாளனாக பணிபுரிகிறேன்.. கையளவு சம்பளம் மனதளவு வேலை.. என நிம...