ஆண்கள் அமர்ந்து பேசிகொண்டு
இருக்கும் போது பவியும் விக்கியும்
மாடியில் இருந்து வந்தனர்.விக்கி மாமாவிடம் சென்றான். பெருமாள் விக்கியை அறிமுகபடுத்தினார்.
விக்கி கண்ணனை பார்த்து ஹாய்
ஜ யம் விக்னேஷ் நீங்க என்றான்.ஜ யம் கண்ணன். உங்கள எப்பிடி
கூப்ட அதற்கு மாமான்னு கூப்டு
என்றான்.கண்ணன் பவியை பார்த்து
நீங்க யாரு என்றான். உடனே பவி
ஐ யம் பவித்ரா நீங்க என்றாள்.கண்ணன் உன்னோட சித்தப்பா என்று
கூறினான்.ராமசாமி பவிகுட்டி தாத்தாட்ட வாங்க என்று கூறி மடியில் வைத்து கொண்டார்.
அப்போது பெருமாள் விக்கியை பார்த்து எங்க கவி அத்தை என்று கேட்டார்.
உடனே பவி அழுக ஆரம்பித்தாள்.
கமல் பவி டார்லிங் ஏன்டா அழுர கவி சித்தி எங்கடா என்றான்.
கண்ணனும் ராமசாமியும் எதுக்குமா அழுரீங்க சொல்லுங்க என்றனர்.
விக்கி பவி ஊஞ்சல வச்சு அத்தைய அடிச்சிட்டா அத்த வலில அழுதுட்டு இருக்கு என்று கூறினான்.
பெருமாள் வேகமாக மாடி
ஏறினான். எல்லோரும் சென்றனர்.பெண்களும் பின்னால் சென்றனர்.
பெருமாள் கவிம்மா என்னாச்சு என்று
அருகில் சென்றார். அவரை கட்டி
கொண்டு அழுதாள்.மாமா கால்ல அடி பட்டிருச்சு தூக்கிட்டு போங்க என்றாள்.
ராணி அருகில் சென்று எங்கடி என்று
பார்த்தாள். சின்ன காயம்தான் எழுந்து
கைய பிடிச்சி நட என்றார்.பெருமாள் ராணியிடம் கவிமா தான் வலிக்குது சொல்லுதுல என்று கூறி தூக்கினார்.
ராமசாமி இங்க ரெண்டு ரூமுல
ஒன்னுல படுக்க வைப்பா என்று
கூறினார்.அங்கு இருந்த ரூமில் படுக்க வைத்தார். பெருமாள் சரிமா நீ
தூங்கு ரொம்ப வலிச்சா ஹாஸ்பிட்டல்
போகலாம் என்றார்.