இவளை விடக் கூடாது என்ற நோக்கத்தில் அவளை துரத்திச் சென்ற ஷான் அவளை வழிமறித்தான்.
என்ன கேட்க போறானோ ? என்ற பயத்தில் கண்களை அங்கும் இங்கும் அலைய விட்டபடி நின்றிருந்தாள் சுமி.
"சுமி உண்மைய சொல்லு உனக்கு ஏது இவ்வளவு பணம்?"
"எந்த பணம்?"
"அதான் உன்னோட டைரில வச்சிருந்தியே அந்த பணம் தான்"
"அது எனக்கு டாடி கொடுத்தது தான்"
"பொய் சொல்லாத சுமி நான் டாடிக்கு போன் பண்ணி கேட்கட்டுமா"
"இல்லை இல்லை வேண்டாம் நான் சொல்ரேன்.." என்றவள் சொல்ல தயங்கிய படி நின்றிருந்தாள்.
"இப்போ சொல்ல போறியா இல்லையா?" என ஷான் உரத்து கேட்க
"சொல்ரேன்..சொல்ரேன் கத்தாத" என்றவள்
அது உன்னோட ப்ரெண்டு ஒருத்தன் தான் வந்து எங்கிட்ட உன்னோட மொபைல எடுத்து தர சொன்னான்.
நான் முடியாதுனு சொல்லவும் காசு தரேன் எடுத்து கொடுனு சொன்னான்
நான் அப்பவும் இயலாதுனு தான் சொன்னேன் ஆனாலும் வலுக்கட்டாயமா கொடுத்து விட்டுட்டான்.
சரி போனால் போகட்டும்னு கொண்டு வந்து வச்சிருந்தென் அவ்வளவு தான்""அதை ஏன் நான் கேட்டதும் சொல்ல இவ்வளவு கஷ்டம்"
"நீ மம்மி டாடி கிட்ட சொல்லிடுவியோன்னு பயந்து தான் சொல்லாம பார்த்தேன்"
"சரி சரி நான் சொல்லல
என் ப்ரெண்டுனு சொன்னியே அது யாருனு தெரியுமா? ""ஆஹ் நியாபகம் இருக்கு ஆனால் பெயர் எதுவும் தெரியாது டா"
அப்படியா ! என்றவன் உடனடியாக தன் மொபலை எடுத்துக் அண்டனை காட்டி இவனா ? என கேட்க
கொஞ்சம் கொடு என போனை வாங்கி நன்றாக உற்று பார்த்தவள் "ஆமாம் ஷான் இவன் தான் " என்றாள்.
இவன் எதுக்கு என்னோட மொபைல திருட ட்ரை பண்ரான் என்ற யோசனையோடு "இதோ பாரு சுமீ இவன் என்னோட ப்ரெண்டு கிடையாது இதுக்கு அப்றொம் இவன் உன் கூட பேசினான்னா எதுவும் பேசாத புரிஞ்சதா?" என சொல்ல
YOU ARE READING
காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔
Romanceஅறியாத பாதையில் புரியாத புதிரானது அவள் வாழ்க்கை..