எங்களின் எண்ணங்கள் 2

737 20 3
                                    

26.Meerajo:

மனம் வருடும் ஓவியமே!

   நான் எழுதிய இரண்டாவது ரிலே கதை…
ரிலே கதை எழுதுவதே ஒரு சவாலான வேலை… ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கென்று தனி ஸ்டைல் இருக்கும்… ஒருவர் காதல் கதையில் சிறந்தவர்களாக இருப்பர்… ஒருத்தர் திகில் கதையில் அசத்துவாங்க… I mean தென்றலாக ஒருவரும் புயலாக ஒருவரும் சேர்ந்தாலே கதையின் போக்கை கணிக்க முடியாது… ஆனால் இங்கே ஐம்பது எழுத்தாளர்கள்!!! நினைத்துப் பார்க்க முடியாத திருப்பங்கள்...
ஐம்பது விதமான சிந்தனைகள் கலந்த கதை இது… காக்டைல் பார்ட்டி யை போல் களைகட்டியது...
  நல்ல அனுபவம் கிடைத்தது….
ஐம்பது மாறுபட்ட கருத்துகளை கொண்ட எழுத்தாளர்களை ஒன்றிணைத்து ஒரு கதையை உருவாக்க மிகப்பெரிய பொருமையும் எந்த சிட்சுவேசன் னையும் கையாளும் திறமையும் வேண்டும்…. அதில் தர்ஷினி சிம்பா சகோதரி மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்… அருமை சகோதரி… managing power உங்களுக்கு கைவந்த கலையாக இருக்கிறது….
(மீரா சும்மா சொல்றாங்க... யாரும் நம்பாதிங்க...- தர்ஷினிசிம்பா😊)

நான் 26 வது எபிசோட் எழுதினேன்… நான் எழுதும் பாகம் என்னுடன் பயணித்த எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் சந்தோஷம் தரவேண்டுமே என்ற டென்ஷன் இருந்தது… நல்லவேளை வாசக அன்புள்ளங்கள்  வாழ்த்தியதில் மகிழ்ச்சி…
இதன் வாயிலாக எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர்…
வாசகர்களாகவும், எழுத்தாளர்களாகவும்…

உடன் வந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் எனது நன்றிகள்… வாழ்த்துக்கள்… இது மிகச்சிறந்த சாதனைதான் சகோதர சகோதரிகளே😍😍😍

இனிய அனுபவத்தை எனக்களித்த தர்ஷினி சிம்பா சகோதரிக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏😍😍😍

***********

27.vaishu:

ஹாய் சகோஸ்.

வணக்கம். உங்கள் சகோதரி வைஷூ அய்யம் பேசுகிறேன்.

எழுத்துக்களை உருவாக்கும் பல தரப்பட்ட எண்ணங்கள் கொண்ட எழுத்தார்களை வைத்து ஒரு படைப்பை உருவாக்கி அதில் வெற்றியும் கண்ட கூட்டு முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

மனம் வருடும் ஓவியமே!Where stories live. Discover now