மித்ரன் ஆருஷாவின் பதிலை கேட்க அவளை பிடித்து வைத்திருக்க விஷானி ஜெய்யின் குணத்தில் அவன் பக்கம் சாய துவங்கினாள். அபி மேகாவை முத்தமிட நெருங்க மேகா அபி நெறுங்கவும் கண்ணை மூடிக் கொள்ள அபி மேகா இதழ் மேல் லேசாக அவன் இதழை ஒற்றவும் மேகா அபியை தள்ளி விட்டு நகர்ந்தாள்.
அபிக்கு மேகாவின் இதழ் ஸ்பரிசம் மோகம் கொள்ள செல்ல விலகியவளை மீண்டும் இழுத்து அதே நிலையில் நிற்க வைத்து "நிலா" என்று கிரக்கமாக அழைக்க மேகா அபியை நிமிர்ந்து பார்க்க அபி கண்ணில் அத்தனை தாபம் மேகா சட்டென அபியை தள்ளி விட்டு வெளியில் வந்து விட்டாள்.
மேகா விலகியதை ஏற்றுக் கொள்ள முடியாத அபி நிலா நிலா என்று கத்திக் கொண்டு அவள் பின் சென்றவன் விஷானியை பார்த்ததும் நின்று விட்டான். விஷானி தண்ணீரில் விளையாடிக் கொண்டிருக்க ஜெய் "விஷானி போதும் போலாம்" என்று அழைக்க விஷானியும் அவளுடன் சென்றாள்.
மித்ரன் ஆருஷாவிடம் பதில் கேட்க ஆருஷா "வீட்ல பேசுங்க தரன்" என்று கூற மித்ரன் ஆனந்தமாக ஆருஷாவை தூக்கி சுற்ற சந்தோஷ கூச்சலுடன் "லவ் யூ" என்று கத்த ஆருஷா "ஐய்யோ தரன் என்ன பன்றிங்க கீழ விடுங்க" என்று கூற மித்ரன் ஆருஷாவை கீழே இறக்கி விட்டு அவளை இடையோடு அணைத்தவன் "அது என்ன டி தரன்" என்று கேட்க
ஆருஷா அவனை கழுத்தோடு அணைத்தவள் "அதுவா விஷானி உங்கள யோக் அண்ணான்னு கூப்ரா உங்க ப்ரண்ட்ஸ் உங்கள மித்ரான்னு கூப்ராங்க மேகா உங்கள மித்து அண்ணான்னு கூப்ரா நானும் அதே மாதிரி கூப்ட முடியுமா நா உங்களுக்கும் நீங்க எனக்கும் ஸ்பெஷல் இல்லையா அதான் தரன்னு செல்லமா நா மட்டுமே கூப்டனுன்னு பேர் வச்சன்" என்று கூற
மித்ரன் சிரித்துக் கொண்டே "என் செல்லம்" என்று கூறி அவள் கன்னத்தில் முத்தமிட ஆருஷா முகத்தை கோனலாக வைத்துக் கொண்டு "ச்சீ எச்சி" என்று துடைக்க மித்ரன் "என்னது எச்சையா உன்ன" என்று கூறி அவன் கன்னம் நெற்றி மூக்கு கண் என்று அவள் முகம் முழுக்க முத்தமிட்டு விட ஆருஷா அதிர்ச்சியாக மித்ரனை பார்க்க மித்ரன் சிரித்தான்.
YOU ARE READING
உன் நிழலாக நான்
Romanceஎதிர்பாராமல் அவன் கையால் அவள் கழுத்தில் ஏறும் மாங்கல்யம் பிரிய நினைக்கும் மனம் சேர்த்து வைக்க நினைக்கும் விதி எல்லாரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒருத்தர் இருப்பாங்க அந்த நிழல் தான் உன் நிழலாக நான்.