நிழல் - 26

1.1K 63 10
                                    

ஆதர்ஷ் மேகாவிடம் கையை கொடுத்து அறிமுகம் செய்துக் கொள்ள கண்ணாடி டம்ளர் விழுந்து உடையும் சத்தம் கேட்டு பதறி சத்தம் வந்த திசையை பார்த்தனர். ஆதர்ஷ் மேகாவை கண்டதும் அவள் அழகாக இருப்பதாக கூறியதும் கோபம் கொண்டவன் கையில் பற்றி இருந்த கண்ணைடி டம்ளரை இறுக பற்றிய அபி ஆதர்ஷ் அவள் கையை பிடித்ததும் கோபம் அதிகமாக கையில் இருந்த டம்பளரை ஒங்கி கீழே போட்டான்.

அங்கிருந்த அனைவரும் அது தெரியாமல் விழுந்ததாக நினைத்துக் கொள்ள அபியின் நண்பர்களுக்கும் மேகாவிற்க்கும் மட்டும் அது அபி வேண்டும் என்றே கோபத்தில் போட்டது என்று தெரிந்தது. அபி அமைதியாக தலையை தரையை பார்த்தவாறே அமர்ந்திருக்க  பாட்டி அவன் அருகில் சென்று "அபி உனக்கு எதும் இல்ல இல்ல கண்ணாடி எதும் மேல படல இல்ல" என்று அக்கறையாக கேட்க வரிசையாக அவன் தாய் தந்தை தாத்தா விஷானி ஆதர்ஷ் என்று அனைவரும் அவன் அருகில் சென்று நின்றனர்.

கோபத்தில் இருந்த அபி கோபத்தை கட்டுப் படுத்திக் கொண்டு முகத்தை சீறாக வைத்துக் கொண்டு "இல்ல பாட்டி எதும் இல்ல" என்று கூறியவன் எழுந்து மேகாவை முறைத்து விட்டு அவன் அறைக்கு செல்ல அவன் நண்பர்களும் அவனுடன் சென்றனர். ஆதர்ஷை தயார் ஆகி வர சொல்லி அனுப்பி விட்டனர்.

ஜெய்யும் குருவும் ஏதோ விழுந்து உடையும் சத்தத்தில் உள்ளே ஓடி வந்து பார்க்க அனைவரும் அபியை சூழ்ந்து இருந்தனர். ஜெய் அதை கண்டு பதட்டமாக மேகா அருகில் சென்று "என்ன ஆச்சி" என்று கேட்க மேகா நடந்ததை கூற குரு "அவர் தான் உன்னை வேணான்னு சொல்லிட்டு போய்ட்டாரு அப்பறம் ஏன் உன் மேல பொஸஸ் ஆகனும் அதும் அவர் தம்பி கை கொடுத்ததுக்கே" என்று அதிர்ச்சியாக கேட்க இருவரும் அமைதியாக அபியை பார்த்தவாறே நின்றனர்.

ஜெய் அபி அவன் அறைக்கு செல்ல அவனை கடந்து சென்றவனை முறைத்துக் கொண்டிருக்க அபி ஜெய் அருகில் நின்றிருந்த மேகாவை முறைத்து விட்டு சென்றான். மேகா அபி முறைப்பதை கண்டு கீழே குனிந்துக் கொண்டாள். அவள் குனிந்ததால் அவள் கண்ணில் அபி காலில் பட்டுள்ள அடி தெரிந்து விட்டது.
மேகாவால் அதை கண்டதும் அமைதியாக இருக்க முடியவில்லை ஜெய்யை அழைத்தவள் "ஜெய் அவன் கால்ல அடி பட்டிருக்கு நா போய் பார்த்துட்டு வரன்" என்று கூற ஜெய் கோவமாக "ஒன்னும் தேவையில்லை அவன் தான் வேணான்னு சொல்லிட்டு போய்ட்டான் இல்ல அப்பறம் என்ன உனக்கு அவன் மேல அக்கறை" என்று கூற மேகா "டேய் அவனுக்கு என்னை பிடிக்கலனாலும் எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும் டா கண்ணு முன்னாடி அவனுக்கு அடி பட்டிருக்கும் போது எப்படி சும்மா இருக்கறது அது என்னால முடியாது" என்று கூறியவள் அபியின் அறைக்கு சென்றாள்.

உன் நிழலாக நான்Where stories live. Discover now